ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க பாடுபடும் இஸ்ரேல்

ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க பாடுபடும் இஸ்ரேல்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைக்க உலக நாடுகளின் ஆதரவை திரட்டப் போவதாக இஸ்ரேல் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

அமைதியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எனவும், இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமீர் ஓஹானா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்திற்கான ட்ரம்பின் முயற்சியையும்  அவர் பாராட்டினார்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து  உலகம் முழுவதும் எட்டு பிராந்தியங்களில் இடம்பெற்ற மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என்றும் அமீர் ஓஹானா தெரிவித்துள்ளார்.

ட்ரம்பை யூத வரலாற்றின் மாபெரும் மனிதர் என்றும் இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமீர் ஓஹானா தெரிவித்துள்ளார்.

Share This