காசாவில் மருத்துவமனையொன்றிலுள்ள அனைவரையும் வெளியேற்றிய இஸ்ரேல்
வடக்கு காசாவில் செயற்பட்டு வந்த இறுதி மருத்துவமனைகளில் ஒன்று இஸ்ரேலிய இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார வசதிகள் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பொது மக்கள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நோயாளர்கள் மற்றும் பணியாளர்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு இஸ்ரேலிய இராணுவம் நிர்வாகத்திற்கு 15 நிமிடங்கள் காலவகாசம் வழங்கியதாக கமல் அத்வான் மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்பின்னர் இஸ்ரேலிய துருப்புக்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து மீதமுள்ள நோயாளர்களை வெளியேற்றியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மருத்துவமனையின் பகுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகக் கூறியது, அதை ”
ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை என மருத்துவமனையின் பகுதியொன்றை இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.