காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்
காசா பகுதி முழுவதுமாக பாடசாலைகள், மருத்துவ இலக்குகள் மற்றும் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்ளை நடத்தி வருகிறது.
சனிக்கிழமையன்று விடியற்காலை தாக்குதல்கள் ஜபாலியாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டனர்.
காசா நகரின் வடகிழக்கில் பாடசாலையில் இருவரும் கான் யூனிஸின் தெற்கே கூடாரத்தில் தங்கியிருந்த ஒருவரும் இஸ்ரேல்
மேற்கொண்ட தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர்
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 36 பேர் உயிரிழந்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
இஸ்ரேலியப் படைகள் பெய்ட் லாஹியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டஜன் கணக்கான வீடுகளை எரித்ததாகவும்
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.