நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – போக்குவரத்து குற்றங்களுக்காக 4000 இற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 29, 783 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் தொடர்புடைய, மற்றும் நேரடியாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்ய 270 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணைகளுடன் 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 34 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,188 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
