விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆரா? புத்தாண்டு சுவரொட்டிகளால் பரபரப்பு
புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில் இந்தியாவிலும் முக்கிய சுற்றுலாத் தளங்கள், கட்டிடங்கள் போன்றன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தேனி மாவட்டம் பெரிய குளம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் எதிர்வரும் ‘2026 ஆம் ஆண்டு தமிழகத்தைக் காப்பதற்காக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே’ என்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
இச் சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.