ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா? – மீண்டும் ஆக்ரோஷமடைந்த அர்ச்சுனா எம்.பி

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.
இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் தனது கருத்தை முன்வைக்க நேரம் வழங்கப்படாமை குறித்து கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஆளும் கட்சி முன்வைத்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி இராமநாதன் அர்ச்சுனா ஒரு நிமிட நேரத்தை கோரியிருந்தார்.
அவருடைய கோரிக்கைக்கு ஏற்ப அவருக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டது எனினும், அவர் மற்றுமொரு கருத்தை முன்வைத்த காரணத்தினால் சபாநாயகர் அவரை மறுத்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,
“ ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதி. நீங்கள் என்னை இடையூறு செய்கிறீர்கள், மறுபடியும் எனக்கு ஒரு நிமிடம் தாருங்கள்.
ஏன் நீங்கள் எங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை. முக்கியமான ஒரு காரணத்தை முன்வைக்க நேரத்தை தாருங்கள்.
பக்க சார்பாக நடந்துக் கொள்ள வேண்டாம். ” எனத் தெரிவித்தார்.