சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகள் CID க்கு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்
குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அம்பலாங்கொடை – கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது