தேசபந்துக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணை

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உரிய பாதுகாப்பை வழங்குமாறு கோரி, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு, தேசபந்து தென்னகோன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானை இம்ரானினால், தேசபந்து தென்னகோனை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.