இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும், சம்பூருக்கு மின் திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக இந்தியாவில் இருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று நாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுரகுமார திசாநாயக்க முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இந்தியா சென்றிருந்தார்.
இதன் போது பிரதமர் மோடி உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.