வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்தியா நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்தியா நிவாரணம்

சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு நேற்றைய தினம் யாழ், இந்திய துணைத் தூதுவரினால், நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளர்களில், முதற்கட்டமாக, மன்னார் நகரப் பகுதிக்கு உட்பட்ட துள்ளுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 8 கிராமங்களைச்ச சேர்ந்த 461 பயனாளர்களுக்கும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலியாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மூன்றாம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 255 பயனாளர்களுக்கும் மொத்தமாக 716 பயனாளர்களுக்கு முதற்கட்ட மாக இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அண்மையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர், காதர் மஸ்தான்,இந்திய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதுதர் ஸ்ரீ சாய் முரளி, இந்திய துணை தூதரக அதிகாரி, மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட குறித்த பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This