இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 06 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் மகளிர் உலகக்கிண்ண தொடரிலும் கைகுலுக்கலுக்கான மறுப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.