பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கான தனது வான்வெளியை இந்தியா மூடியுள்ளது.

கடந்த வாரம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த கடுமையான அரசியல் முடிவுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்கான விமானப் பாதையை மூடியதை அடுத்து, இந்திய அரசாங்கம் நேற்று (30) இரவு இந்த முடிவை எடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடை ஏப்ரல் 30 முதல் மே 23 வரை நடைமுறையில் இருக்கும் என்று இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் மட்டுமே இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்குவதால், இந்தியாவின் முடிவு பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு கடுமையானதாக இருக்காது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த வாரம், பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இயக்கப்படும் விமான நிறுவனங்களுக்கு மூடியது.

பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடிய பிறகு இந்திய விமான நிறுவனங்கள் மில்லியன் கணக்கான ரூபாய்களை இழந்து வருவதாக business-standard.com வலைத்தளம் வெளிப்படுத்தியது.

இதனால் வட இந்திய நகரங்களில் இருந்து சர்வதேச விமானங்களில் வாரத்திற்கு 77 கோடி ரூபா கூடுதலாக இந்திய விமான நிறுவனங்களுக்கு செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This