‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21ஆம் திகதி ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம்,
போட்டி இருந்தால், அடுத்த மாதம் 09 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.