இந்தியாவிலிருந்து மிதந்து வரும் கழிவுகளின் அளவு அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து மிதந்து வரும் கழிவுகளின் அளவு அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ள நிலையில் சுற்றாடல் அமைச்சு விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மன்னார், யாழ்ப்பாணம், கற்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் அதிகளவான கழிவுகள் குவிந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சென்னை, கேரளா, கொச்சின், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் போத்தல் வகைகள், வலைகள், பூங்கொத்துக்களுக்கு பயன்படுத்தப்படும் கயிறு போன்றவையே அதிகளவாக நாட்டின் கடற்பிராந்தியங்களில் தேங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருதரப்பினரும் இணைந்து நிரந்தர தீர்வை காண வேண்டியது அவசியம் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Share This