இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிப்பு

இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தர இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளுக்கான மேலதிக நேர கொடுப்பனவு 151 ரூபாவினாலும் இரண்டாம் தர இதய நுரையீரல் வைத்திய அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவு 65 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், இதற்கான நிலுவைத்தொகை செப்டம்பர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.