குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒன்பதாயிரத்து 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாடுகளில் 1620 முறைப்பாடுகள் கடுமையான குழந்தைகள் துஷ்பிரயோக சம்பவங்கள் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடுமையான பெண் துஷ்பிரயோகம் தொடர்பான 373 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.