மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்

மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்

மொனராகலை, மரகல தோட்டம் ரிசர்வ் பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று
சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பீப்பாய்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This