மித்தெனிய இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள்

மித்தெனிய இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள்

மித்தெனிய தோரயாய பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் பெரும்பாலனவை ஐஸ் போதைப்பொருள் அடங்குகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை கடந்த வௌ்ளிக்கிழமை(12) மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மித்தெனிய பகுதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 05ஆம் திகதி குறித்த இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமனிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய குறித்த இரசாயனப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதேவேளை, நெடோல்பிட்டிய மற்றும் கந்தான பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் அறிக்கைகள் ஒப்படைக்கப்படும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

Share This