ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இன்று இறுதிப் போட்டி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இன்று இறுதிப் போட்டி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2:30 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும்.

இரு அணிகளும் முன்னர் 2000ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தன. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 119 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 61 போட்டிகளில் இந்தியாவும், 50 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன.

ஒரு போட்டி சமநிலையிலும், ஏழுப் போட்டிகள் முடிவுகள் இன்றியும் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This