“நான் பிறந்திருக்கவே கூடாது“ – இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி

“நான் பிறந்திருக்கவே கூடாது“  – இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது மொத்த இந்திய சினிமாவுக்கே பெருமைக்குரிய அடையாளமாக திகழ்கிறார்.

தற்போது ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இசைஞானி, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இசைமைத்திருந்தார்.

அப்போது இசைஞானி அளித்த பேட்டி இணையத்தில்  அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

கெளதம் மேனன் பேட்டியளித்தபோது, நீங்கள் இன்று சந்தோஷமாகத்தானே இருக்கிறீர்கள் என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு இசைஞானி, “நான் என்னை எப்போதே இழந்துவிட்டேன், இன்னும் சொல்லப்போனால் நான் என்றைக்கோ இறந்துவிட்டேன்.

ஒரு மனிதனாக நான் கூறுகிறேன், யாராவது நமது தவறுக்கு பெருமைப்படுவார்களா? இந்த தவறை நான் செய்யவில்லை.
நான் பிறந்தது என்பதைத்தான் தவறு என்கிறேன். என்னைக்கேட்டால் இது தேவையில்லாத பிறப்பு கெளதம். மக்களுக்கு இங்கு வருவது, அமர்வது, லண்டனுக்கு சென்று இசைமையப்பது இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகிறது.

இதை எப்படி என்னால் பெருமையாக உணரமுடியும். என் முன்னாலே என்னை பலரும் புகழ்கிறார்கள், அதை என்னால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு தானே தெரியும் என்னை, நான் எவ்வளவு கற்றுக்கொண்டுள்ளேன் என்பது எனக்கு தானே தெரியும்.

ஆனால் எனக்கு என்ன கிடைக்கிறது பார்த்தீர்களா? இந்த பேரும் புகழும் எப்படி வருகிறதென்றே தெரியவில்லை.
எனக்கு இது எல்லாம் எதனால் என்று தெரிய வருகிறதோ, அப்போது நான் இசையமைப்பதை நிறுத்திவிடுவேன்” என்று உணர்ச்சிபூர்வமாக இசைஞானி இளையராஜா பேசியுள்ளார்.

 

Share This