ஆண்டின் முதல் காலாண்டில் 07 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
இதன் மூலம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 722,276 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 39,212 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
மேலும் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.