தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று, 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு
அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் லொறி கவிழ்ந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அதிவேக வீதி பொலிஸார் வாகன நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This