ஹர்ஷன நாணயக்காரவின் “கலாநிதி” பட்டம் – இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்

ஹர்ஷன நாணயக்காரவின் “கலாநிதி” பட்டம் – இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்ற பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.

அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற அதிகாரிகள் இரகசியப் பொலிஸாரிடம் அழைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் இரகசிய பொலிஸார், சபாநாயகர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்ற பெயருடன் அனுப்பப்பட்ட கடிதம் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளருக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் இரு அலுவலகங்களிலும் உள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

Share This