பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நால்வரின் உடல்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நால்வரின் உடல்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி நடந்த தாக்குதலில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளைய கைதிகளான கிஃபிர் பிபாஸ் மற்றும் அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல் ஆகியோரின் உடல்களை வியாழக்கிழமை ஹமாஸ் ஒப்படைத்தது.

இந்நிலையில், காசாபகுதியில் இருந்து செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் காசா நான்கு கருப்பு நிற சவப்பெட்டிகளுடன் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு சவப்பெட்டியிலும் பணயக்கைதிகளின் சிறிய படம் ஒட்டப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் ஆதரவு, கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் கடந்த மாதம் எட்டப்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இரண்டு சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாய் ஷிரி பிபாஸின் உடல்களையும், நான்காவது பணயக்கைதியான ஓடெட் லிஃப்சிட்ஸின் உடல்களையும் ஒப்படைத்தது.

இதனையடுத்து காணொளி ஒன்றின் ஊடாக இன்று வியாழக்கிழமை பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “இஸ்ரேல் அரசுக்கு மிகவும் கடினமான நாள். ஒரு வருத்தமளிக்கும் நாள், துக்க நாள்” என்று கூறினார்.

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் சடலங்கள் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கருப்பு மற்றும் உருமறைப்பு சீருடையில் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் போராளிகள் அந்தப் பகுதிக்கு வந்திருந்தனர்.

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி காசாவிலிருந்து ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்காரர்களால் கைப்பற்றப்பட்ட காசாவிற்கு அருகிலுள்ள சமூகங்களில் ஒன்றான கிபூட்ஸ் நிர் ஓஸில் பிபாஸ் குடும்பம் கடத்தப்பட்டபோது கஃபிர் பிபாஸுக்கு ஒன்பது மாத வயதாகும்.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் சிறுவர்களும் அவர்களது தாயாரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் 2023 நவம்பரில் கூறினார், ஆனால் அவர்களின் இறப்புகள் இஸ்ரேலிய அதிகாரிகளால் ஒருபோதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடைசி நிமிடத்தில் கூட, சிலர் அவர்கள் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

சடலங்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேலியக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

சடலங்களை அடையாளம் காண இஸ்ரேலுக்கு தேசிய தடயவியல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், இந்த செயல்முறை சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் கூட ஆகலாம்.

சடலங்கள் அடையாளம் காணப்பட்ட பின்னரே அவர்களின் இறப்புகள் மற்றும் இறுதிச் சடங்குகள் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This