கடுவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை

கடுவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்று ரீ-56 துப்பாக்கிகள்,05 பிரவுனிங் பிஸ்டல்கள் மற்றும் ஒரு மெகசின் ஆகியன பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன

குறித்த பகுதியிலுள்ள மரமொன்றுக்கு அடியிலிருந்து இவை கண்டெடுக்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளுக்காக அவை நவகமுவ பொலழஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் T-56 மகசின் போலியானது அல்லவென தெரிவிக்கப்படுகிறது.

இந்த போலித் துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share This