அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை மற்றும் அறிவியல் சேவை உள்ளிட்ட பல்வேறு பணியாளர் மட்டப் பணிகளுக்கு தகுதியான நபர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மேலும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் போன்ற அத்தியாவசிய வெற்றிடங்களும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆட்சேர்ப்புகளும் போட்டித் தேர்வுகள் மூலம் நடத்தப்படும்.

ஏழு ஆண்டுகளில் பெரியளவிலான பொதுத்துறை ஆட்சேர்ப்பாக இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This