அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு ணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பமாகும் என இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்திய அதிகாரிகளின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

Share This