விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படும் என அரசாங்கம் உறுதி

விவசாயிகள் மத்தியில் தற்போது நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும் எனவும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, விவசாயிகள் போராட்டம் நடத்த தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படும் என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.