இலங்கையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தில் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,120 டொலரை தாண்டியுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 8,000 ரூபா அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று காலை (11), கொழும்பில் உள்ள செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 காரட்” தங்கம் 7,000 ரூபா அதிகரித்து 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒரு பவுண் “22 காரட்” தங்கம் 293,200 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் தற்போது விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை 317,000 ரூபாவாக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று 325,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share This