இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு – பவுண் மூன்று லட்சம் ரூபாவிற்கு கீழ் குறைந்தது

கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தங்க சந்தையில் இன்று (28) ஒரு பவுண்டு 24 காரட் தங்கத்தின் விலை 322,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை 379,200 ரூபாவாகவும், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை 410,000 ரூபாவாகவும் அதிகரித்திருந்தது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து உயரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேற்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி, தங்கம் ஒரு அவுன்ஸ் 4,076 அமெரிக்க டொலர்களாகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 48.21 அமெரிக்க டொலர்களாகவும் வர்த்தகம் செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
