தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை 4,150 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) சுமார் 6,000 ரூபா அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு, தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 309,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரவிக்கப்படுகிறது.

நேற்று (24) 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 303,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

மேலும் நேற்றைய தினம் 330,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 336,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )