காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த தீவிர குண்டுவெடிப்பில் 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் வைத்தியர் ஹுஸாம் அபு சஃபியாவை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ள நிலையில் இது காசாவின் சுகாதாரத் துறையை அழிப்பதற்கான இஸ்ரேலின் பரந்த முயற்சிகளில் இனப்படுகொலை நோக்கத்தின் அடையாளமாக காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.
காசாவில் உள்ள 27 சுகாதார நிலையங்கள் மீது 136 இஸ்ரேலிய தாக்குதல்களை உலக அமைப்பு பதிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துள்ள நிலையில் இதுவரை 45,658 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 108,583 பேர் காயமடைந்துள்ளனர்.