சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

ரஷ்யா, ஜேர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 641,961 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது

 

Share This