
ஹாக்கி போட்டியைக் காண்பதற்கு இலவச டிக்கெட்
உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியைக் காண்பதற்கு இரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவுள்ளது.
சென்னை, மதுரையில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் 24 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
ஜூனியர் உலக கோப்பையில் அதிக அணிகளும், அதிக போட்டிகளும் நடைபெறும் தொடராக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் மாணவர்கள், இளம் விளையாட்டு வீரர்கள், குடும்பத்தினர், ஹாக்கி விளையாட்டை விரும்புபவர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வகையில் இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளது என ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலீப் திர்கே தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை மற்றும் ஹாக்கி இந்தியா செல்போன் செயலி மூலம் ரசிகர்கள் இலவச டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
