வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு சக்கர வாகனம், ஒரு தனியார் மினி பஸ், லொறி ஆகியவை மோதிக்கொண்டதிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவமறிந்து அவ் இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதோடு காயமடைந்த அனைவரையும் அரச மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This