அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காணமற்போயுள்ளதுடன் சுமார் 50,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்வதாக அங்கு பலத்த மழை வீழ்ச்சி பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி மற்றும் நியூகேஸில் இரவு முழுவதும் பெய்வதால் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share This