விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன, எனினும், வீட்டை திகாரப்பூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் 11ஆம் திகதி விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
இதேவேளை, அமைச்சர் வசித்த வீடுகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும், இந்த விடயத்தில் அரசாங்கம் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, குறித்த வீடுகள் நாளுக்கு நாள் பாழடைந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்கள் வசித்த வீடுகளுக்க மேலதிகமாக, கடந்த காலங்களில் மூடப்பட்ட பல கட்டிடங்கள் குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்க உள்ளது.
இந்த கட்டிடங்கள் சிறிது காலம் அரசு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவிடம் வினவிய போது, அமைச்சர்கள் வசித்த வீடுகள் குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
அந்த வீடுகள் உட்பட கட்டிடங்கள் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமைச்சர்கள் வசித்த வீடுகளிகளில் சில புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைச்சர்கள் வசித்த வீடுகளை வழங்குமாறு கோரியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் கூறுகிறது.
கொழும்பு நகரில் உள்ள அமைச்சர் வீடுகளின் எண்ணிக்கை ஐம்பத்தைந்து ஆகும்.