யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் உயிரிழப்பு
வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் நேற்று மாலை தான் வளர்க்கும் மாட்டினை வீடு நோக்கி கொண்டு சென்றபோது வேலங்குளம் இராணுவ முகாமுக்கு அருகில் வீதியில் பிரவேசித்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சுமார் மூன்று மணித்தியாலத்துக்கும் அதிகமாக அந்த யானை அப் பகுதியில் அட்டகாசம் செய்துள்ளது.
இதனால் மக்கள் அவ் வீதி வழியாக பயணம் செய்ய முடியாமல் இருந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.