உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்

உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாமையால் இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
பங்கேற்க மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக நாட்டிற்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This