
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 04 லட்சத்தை கடந்தது
இலங்கை வரலாற்றில் 24 கரட் தங்க பவுனொன்றின் விலை இன்றைய தினம் (17) 04 லட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி 24 கரட் தங்க பவுனொன்றின் விலை 04 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க
சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடுகையில் இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்க பவுனொன்றின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து 800 ரூபா அதிகரித்து 379 ஆயிரத்து 200 ரூபாவிற்கு
விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (16) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
