பொரளையில் துப்பாக்கி பிரயோக சம்பவம் – ஒருவர் பலி, மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம்

பொரளையில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்திற்கு நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஐவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர் டி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் தற்போது மறைந்திருக்கும் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே இடம்பெற்று வரும் மோதலின் விளைவாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.