பிடித்த நிறம் உங்கள் குணத்தைக் கூறும்
பொதுவாக ஒவ்வொரு நிறங்களும் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு நிறத்தைப் பிடித்தவர்களினதும் குணாதிசயங்கள் பற்றிப் பார்ப்போம்.
- கறுப்பு நிறம் என்பது அதிகாரம் மற்றும் நுட்பத்துடன் தொடர்புடையது. கறுப்பு நிறம் பிடித்தவர்கள் சுதந்திரம், தனித்துவம், சுய கட்டுப்பாட்டை மதிப்பவர்களாக இருப்பார்கள்.
- சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் தைரியமானவர்களாகவும் துடிப்பானவர்களாகவும் இருப்பார்கள். அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், ஆற்றல் நிறைந்தவர்கள்.
- மஞ்சள் நிறத்தை விரும்புபவர்கள் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்கள் மற்றும் படைப்பாற்றல் அதிகம் உள்ளவர்கள்.
- வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் ஞானம் அதிகமுள்ளவர்கள் உணர்திறன், உள்ளுணர்வு மற்றும் கலையில் அதிக ஆர்வம் உள்ளவர்கள்.
- பச்சை நிறத்தை விரும்புபவர்கள் இயற்கையுடன் தொடர்புடையவர்கள். தாராள மனப்பான்மையுடையவர்கள்.
- நீல நிறத்தை விரும்புபவர்கள் அமைதியானவர்களாகவும் மற்றவர்களுடன் நல்லுறவை பேணுபவர்களாகவும் இருப்பார்கள்.