சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை

07 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம் குற்றவாளிக்கு 30,000 ரூபா தண்டப்பணமும் விதித்தது.
செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒருவருடம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 03 இலட்சம் ரூபா இழப்பீடு மற்றும் அவரது தாய்க்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனைக்குள்ளான நபர் ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையென தீர்ப்பை வழங்கும் முன்னர் அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
அவ்வாறான தந்தையொருவர் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டமைக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.