வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் கோர விபத்து

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வாகனங்கள் பலத்த சேதங்களுக்க உள்ளாகியுள்ளன.
தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவின் கித்துல்கோட பகுதியில் இன்று (17) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ், வேன் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய 03 வாகனங்களுகம் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் எவருக்கும் பெரியளவிலான காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து தனமல்வில பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
