பேராதனை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

பேராதனை, எததுவாவ பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.