ஹபரண பிரதேசத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – 28 படுகாயம்

மாதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமொன்றும் ஹபரனயில் மோதி பாரிய விபத்து ஒன்று இன்று (12) அதிகாலையில் நடந்துள்ளது.
கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரிய படுஓய பாலத்திற்கு அருகில் மாதுருஓயா விலிருந்து கொழும்பு நோக்கிப் பயனித்த தனியார் போக்குவரத்து பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த டிப்பர் வாகணத்தில் மோதி இன்று (12) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில் 28 பேர் படுகாயமடைந்து பொலன்னறுவ, மின்னேரிய, ஹிங்குறாக்கொட ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.