திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கடந்த ஆண்டில் இலங்கையில் பதிவான திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 139,290 திருமணங்கள் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 08 சதவீத வீழ்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலவிய 2022 ஆம் ஆண்டில் 171,140 திருமணங்கள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
