“ஸ்ரீ தலதா வழிபாடு” – போலி அழைப்பிதழ் குறித்து அறிவுறுத்தல்

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் ஊடாக பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழில் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு இந்த வகையான சிறப்பு அழைப்பிதழ் யாருக்கும் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக சிறப்பு (VIP) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதுடன், அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.