பேஸ்புக் விருந்து – 15 இளம் பெண்கள் கைது

பேஸ்புக் விருந்து – 15 இளம் பெண்கள் கைது

பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ பொலிஸ் பிரிவின் கிடிகொட பெல்லன வட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (22) இரவு இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சிகரெட்டுகளும் மீட்கப்பட்டன.

நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக மூன்று பெண்களும் 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த விருந்தில் பங்கேற்ற 12 இளம் பெண்கள் மற்றும் 47 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This