செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14 ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09.07.25) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கி மொத்தமாக 23 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

 

CATEGORIES
TAGS
Share This